பா.ஜனதா பாணியிலேயே பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தி.மு.க. அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது. தி.மு.க.வுக்குள் சிலீப்பர் செல்களை புகுத்தி பல ரகசியங்களை கைப்பற்றி தி.மு.க.வை அண்ணாமலை அலற வைத்து வருவது தெரிந்ததே.
இப்போது அண்ணாமலை தொடங்கி இருக்கும் யாத்திரையில் கூட்டம் திரளுகிறது. அதை பார்த்து தி.மு.க. மிரளவில்லை. மோதி பார்க்க தயாராகிவிட்டது. நடை பயணத்தின் போது பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்ய பா.ஜனதா அழைப்பு விடுத்து இருந்தது. இதை பயன்படுத்தி தி.மு.க. ஐ.டி. துறையும் 234 தொகுதிகளிலும் அதன் நிர்வாகிகளை பதிவு செய்ய வைத்துள்ளது.
இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலீப்பர் செல்களை கூட்டத்தில் புகுத்தி தயாராக வைத்துள்ளார்கள் இவர்கள். அந்தந்த தொகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் போது பொதுமக்களோடு பொதுமக்களாக பா.ஜ.க.வுக்கு எதிராக கேள்வி எழுப்புவது.
தள்ளு முள்ளுவை ஏற்படுத்துவது, இதனால் டென்ஷனாகி அண்ணாமலை பேசினால் அதில் உள்ள நெகட்டிவ் விஷயங்களை சோஷியல் மீடியாக்களில் பரப்புவது என செயல்பட உள்ளனர். இதன் மூலம் அண்ணாமலையின் இமேஜை டேமேஜ் ஆக்குவதுதான் நோக்கம்.