மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?. தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு நாட்கள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.