மேற்கு மெக்சிகோவில் உள்ள டிஜூவானா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியர்கள் 6 பேர் மற்றும் டொமினிகன் குடியரசு, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பர்ரான்கா பிளாங்கா அருகே மலைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் 17 பேர் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பஸ்சில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. விபத்தில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.