மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (3ம் திகதி) பிற்பகல் 41 இலட்சம் மின்கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மிஹிந்தலை விகாரையின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது.
மிஹிந்தலை புனித தலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறியாமல் நேற்றிரவு (3ம் திகதி) மிஹிந்தலாவை வழிபட வந்த பிரான்ஸ் பிரஜைகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட வெளிநாட்டினர் மின் பந்தங்களுடன் மிஹிந்தலை மலையில் ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.