ரஜினிகாந்த் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளிவந்தது. தொடர்ந்து youtubeல் பல லட்சம் மில்லியன் பார்வையாளர்களை இந்த டிரைலர் குவித்து வருகிறது. மேலும் படத்தை பார்த்த இசையமைப்பாளர் அனிருத் தனது விமர்சனத்தையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெயிலர் திரைபடத்தின் டிரைலரில் இடம்பெறும் காட்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இடம்பெறுகிறது.
இந்த புகைப்படம் ரஜினியின் வீட்டில் இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பதை ஆகஸ்ட் 10ஆம் தேதி பார்ப்போம்.