கிளிநொச்சியில், வலைப்பாடு கிராஞ்சி வேரவில் ஆகிய மூன்று கிராம மக்களும் ஒன்றாக இணைந்து பொன்னாவெளி எனும் பழமைவாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை அபகரித்து மக்களையும் எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமெந்து தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த பொன்னாவெளி கிராமம் மிகவும் தொன்மையான பழமை வாய்ந்த ஆலயங்கள் உள்ள தொல்பொருள் வளங்கள் நிறைந்த பிரேதேசம் என்பதால் சீமெந்து தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை சுற்றியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.