யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 2 ஆம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார்.
இந்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும் சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில் மாணவியின் சடலத்தைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.