மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரெயில் மோதியது. இதில் அந்த பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மெக்சிகோவில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.