எரிவாயு சிலிண்டர்களின் விலையை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்பு – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு !!!
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும் எனவும் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதந்தோறும் திருத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.