Friday, December 27, 2024
HomeSrilankaSportsஉலக கோப்பை மகளிர் கால்பந்து: பிரேசில், அர்ஜென்டினா வெளியேற்றம்.

உலக கோப்பை மகளிர் கால்பந்து: பிரேசில், அர்ஜென்டினா வெளியேற்றம்.

உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹேமில்டனில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ‘ஜி’ பிரிவில் உள்ள சுவீடன்-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

அந்த அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதே பிரிவில் வெலிங்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இத்தாலி அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‘ஜி’ பிரிவில் சுவீடன் 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

இத்தாலி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், அர்ஜென்டினா ஒரு டிரா, 2 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தையும் பிடித்தன. இத்தாலி, அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றப்பட்டன. சிட்னியில் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்-பனாமா அணிகள் மோதின. பிரான்ஸ் அணி கோல் மழை பொழிந்தது. அந்த அணி 6-3 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. இதே பிரிவில் மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. ஜமைக்காவை வீழ்த்த முடியாததால் பிரேசில் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இந்த பிரிவில் பிரான்ஸ் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், ஜமைக்கா 5 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. பிரேசில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தையும், பனாமா புள்ளி எதுவும் பெறாமல் 4-வது இடத் தையும் பிடித்து வெளியேறின. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைகிறது.

‘எச்’ பிரிவில் நடைபெறும் ஆட் டங்களில் மொராக்கோ-கொலாம்பியா, ஜெர்மனி-தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இதுவரை சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய போட்டி முடிவில் 2 அணிகள் தகுதி பெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments