அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலாடையின்றி நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை ஒட்டிய கடற்கரைக்கு சென்ற ஜோ பைடன் மேலாடையின்றி நின்றார்.
ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி புடின் சட்டையின்றி குதிரையில் பயணித்த புகைப்படமும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், சில்வெஸ்டர் ஸ்டோலன் ஆகியோர் உடலில் தமது முகத்தை ஒட்டி வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது.
இந்நிலையில் ஜோ பைடனின் மேலாடை அணியாத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.