இன்று (02) காலை வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில், பஸ்ஸொன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பஸ்ஸில் பயணித்த 15 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது எதிர்த்திசையில் வந்த சீமெந்து ஏற்றப்பட்ட லொறி மோதியதில் பஸ் புரண்டு, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.