தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர் ஆரம்பித்த போராட்டம் நள்ளிரவை தாண்டி தொடர்கிறது !!!
யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனே அகற்றக் கோரியும் தனியாருக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர் மீண்டும் போராட்டத்தை இன்று (31) காலை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது நள்ளிரவு தாண்டியும் நடைபெறுகிறது.
நாளை (01) மாலை நான்கு மணி வரை குறித்த எதிர்ப்பு போராட்டம் நடைபெறுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.