கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (01) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்திசையில் இருந்து வந்த பஸ் ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பஸ் வீதியை விட்டு சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.