அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த, இதன் ஒடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 11ம் தேதி முதல் சோனி ஓடிடி தளத்தில் ‘போர் தொழில்’ வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.