மேலும் 3d அனிமேஷனில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில் 250 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நாளுக்கு நாள் பட்ஜெட் எகிறி கொண்டே போகிறதாம். இதனால் தயாரிப்பாளரை கதிகலங்க வைத்திருக்கிறார் சிறுத்தை சிவா.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ஷங்கர் தான் எடுத்து வருகிறார். அவருடைய படங்கள் எப்போதுமே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இப்போது ஷங்கரை மிஞ்சும் அளவிற்கு சிறுத்தை சிவாவின் கங்குவார் பட பட்ஜெட் அதிகமாகியுள்ளது.
அதாவது முதலில் 250 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது 500 கோடி பட்ஜெட்டை நெருங்க இருக்கிறதாம். இப்படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் பாதி முடிந்த நிலையில் இப்போது மீதி உள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு வெளிநாடு சென்று இருக்கிறதாம்.
கங்குவா படம் ஹிஸ்டாரிக்கல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்போது ஒரு தீவு பகுதியில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதற்காக படக்குழு தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் இங்கும் பல கோடிகள் செலவாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இப்போது தயாரிப்பாளருக்கு சிறு கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனாலும் சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போட்ட பட்ஜெட்டை விட கண்டிப்பாக பல மடங்கு வசூலை பெரும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளருக்கு சிறுத்தை சிவா கொடுத்திருக்கிறாராம். அந்த தைரியத்தில் தான் தயாரிப்பாளரும் கங்குவா படத்திற்கு செலவு செய்து வருகிறார்.