Home Srilanka யாழில் பட்டா வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார்; மீட்க்கப்பட்ட 4 கடலாமைகள்.!

யாழில் பட்டா வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார்; மீட்க்கப்பட்ட 4 கடலாமைகள்.!

0

யாழ் மானிப்பாய் பகுதியில் 4 கடலாமைகளை பட்டா வாகனத்தில் கொண்டு சென்ற இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பகுதியில் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பிரிவு பொலிஸார் பட்டாரக வாகனமொன்றை வழிமறித்தனர்.

இந்நிலையில் வாகனத்தின் பின்புறத்தில் சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகள் காணப்பட்டன.

அதனை சோதனையிட்டபோது 4 கடலாமைகள் உயிருடன் கைப்பற்றப்பட்டன.

அவர்கள் கடலாமைகளை விற்பனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்ததனர்.

அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version