Home World மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்கள்: போர் ரஷியாவிற்கு திரும்புவதாக ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்கள்: போர் ரஷியாவிற்கு திரும்புவதாக ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

0

2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 520 நாட்கள் ஆன நிலையில் இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்களும் உயிர்பலிகளும் தொடர்கிறது. இந்நிலையில் ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது. நேற்று ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், 2 கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனால் ரஷியாவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் மூடப்பட்டது. இத்தாக்குதல்கள் குறித்து தனது மக்களுக்கு ஆற்றிய உரையில் கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது: ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது.

ரஷியாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது. இருந்தாலும் ரஷிய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள் என உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த தாக்குதல்கள் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவியதால் நடந்திருக்கின்றன என ரஷியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே ரஷியா கைப்பற்றிய கிரிமியாவின் மீது உக்ரைன் நடத்திய 25 டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version