கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருந்த பல பிரபலங்கள் இப்போது சினிமாவில் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். ஆனால் கிரிக்கெட் அளவுக்கு அவர்களால் இங்கு பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அப்படி சினிமா பேராசையில் வந்து பல்பு வாங்கிய ஐந்து வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
ஹர்பஜன் சிங்: பிரபல கிரிக்கெட் வீரரான இவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இவர் தமிழில் போடும் ட்வீட் மிகப் பிரபலம். அதனாலேயே இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியாவும் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது.
சடகோபன் ரமேஷ்: தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு போட்டா போட்டி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக நடித்தார். ஆனாலும் கூட இவருக்கு தமிழ் சினிமா வொர்க் அவுட் ஆகவில்லை.
ஸ்ரீசாந்த்: விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இவர் சமந்தாவை காதல் என்ற பெயரில் டார்ச்சர் செய்பவராக நடித்திருப்பார். நல்ல வரவேற்பை பெற்ற படம் இவருக்கு ஒர்க்கவுட் ஆகவில்லை. அதனாலேயே இவர் இப்போது காணாமல் போன லிஸ்ட்டில் இருக்கிறார்.
இர்ஃபான் பதான்: இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தில் இன்டர்போல் அதிகாரியாக வருவார். அப்படத்தில் இவருடைய நடிப்பு நன்றாகவே இருந்தது. ஆனாலும் படம் சொதப்பிவிட்ட காரணத்தால் இவருக்கு அடுத்த வாய்ப்புகள் வரவில்லை.
தோனி: தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் தான் தயாரிக்கும் முதல் படம் தமிழ் படமாக தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த வகையில் தற்போது இவர் எல்ஜிஎம் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா போன்ற பலர் நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டது. இதனால் தோனி தமிழ் சினிமாவை நம்பி மொக்கை வாங்கியது தான் மிச்சம்.
இவ்வாறாக இந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதிக்கலாம் என்ற பேராசையில் காலடி எடுத்து வைத்தனர். ஆனால் அவர்களுக்கு பல்பு தான் கிடைத்தது.