விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதிதி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அதர்வா தம்பி, ஆகாஷ் முரளி நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் நடிக்கவுள்ள படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
ராட்சசன் படத்தை இயக்கிய இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கான கதையை கேட்டுள்ளதாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில், கண்டிப்பாக இப்படமும் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.