விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியில் பங்குபெற எத்தனையோ கோடி மக்கள் போராடி வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஆரம்பம் மட்டும் 9 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய இசை ஜாம்பவான்களோடு பாடும் வாய்ப்பை பெற்றவர் பிரியங்கா.
தனது மெல்லிய குரலால் பல பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.
இவர் பாடுவதை தாண்டி தற்போது மருத்துவராக அவதாரம் எடுத்துள்ளார். பல் மருத்துவராக முதல் நாள் வேலையின் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.