Home Srilanka மட்டு மாவட்டத்தில் 29 நாளில் 8 பேரும் – 6 மாதத்தில் 79 பேர் தற்கொலை.

மட்டு மாவட்டத்தில் 29 நாளில் 8 பேரும் – 6 மாதத்தில் 79 பேர் தற்கொலை.

0

கொக்குவில் வெல்லாவெளி ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் யூலை மாதம் தொடக்கம் இதுவரையில் 29 நாட்களில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பகுதியில் 64 வயதுடைய ஆண் ஒருவர் கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி தொடக்கம் யூன் 30 வரை 6 மாத காலப்பகுதியில் 18 வயதுக்கு உட்பட்ட 3 பெண்கள் ஒரு ஆண் உட்பட 4 சிறுவர்களும். 18 வயதுக்கு மேற்பட்ட 61 ஆண்கள் 14 பெண்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 9 பேரும் மட்டக்களப்பு பொலிஸ் பரிவில் 10 பேரும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 13 பேரும் தற்கொலை செய்துள்துடன் இந்த யூலை முதலாம் திகதி தொடக்கம் நேற்று 29 ம் திகதிவரையிலான காலப்பகுதில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்

இதேவேளை கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 18 வயதுக்கு உட்பட்ட 11 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 15 சிறுவர்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 113 ஆண்களும் 20 பெண்கள் உட்பட ஒருவருடத்தில் 133 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே கடந்த 2022ம் ஆண்டின் புள்ளிவிபரத்தையும் இந்த ஆண்டு 6 மாத புள்ளிவிபரத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 6 மாதத்தில் 79 பேர் தற்கொலை அதிகரித்துள்ள மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய புள்ளிவிபரம் காட்டுகின்றது. எனவே அதிகரித்துவரும் தற்கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version