Home India இலங்கைக்கான கடன் நிவாரண கூட்டு முயற்சியில் இணையுமாறு சீனாவிற்கு இந்தியா அழைப்பு.

இலங்கைக்கான கடன் நிவாரண கூட்டு முயற்சியில் இணையுமாறு சீனாவிற்கு இந்தியா அழைப்பு.

0

இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய – ஜப்பான் மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச மற்றும் உலக வங்கியின் பொதுவான கட்டமைப்பிற்குள்ளும், அதற்கு வெளியிலும் உள்ள சிக்கலைத் தீர்க்க சிறந்த மற்றும் விரைவான அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்பதால் கட்டமைப்பிற்கு வெளியே இருந்தாலும், இலங்கைக்கு விரைவான தீர்வு தேவை எனவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஏற்றுமதி தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய தமது 36 ஆவது வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏற்றுமதி செயல் திறன் குறிகாட்டிகள் 2022 என பெயரிடப்பட்டுள்ள இதில் முதன்மையான புள்ளிவிபரங்கள் குறித்து விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையுடனான வெளிப்புற வர்த்தக சமநிலையினை பேணுதல் மற்றும் தனியார் துறைசார் ஈடுபாடுகள் போன்ற முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்த தகவல்கள் அதில் அடங்கியுள்ளன.

ஏற்கனவே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வர்த்தகர்களுக்கு ஏற்ற பல்வேறு புள்ளிவிபரங்களும் குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version