மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட 3,600 வகையான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் மன்னாரில் உள்ள பனங்கட்டிக்கொட்டி பகுதியில், ஒரு வீட்டில் இறைச்சிக்காக ஆமை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர்.
அங்கு மேற்கொண்ட சோதனையில், சுமார் 160 கிலோ கொண்ட அரிய வகை ஆமை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆமையை மீட்டு அதனை பதுக்கி வைத்திருந்தவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் ஆமையை இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.