Home Srilanka யாழ் நகர உணவகங்கள் உரிய தரங்களை கொண்டிருக்கவில்லை. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு !

யாழ் நகர உணவகங்கள் உரிய தரங்களை கொண்டிருக்கவில்லை. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு !

0

பெரும்பாலான யாழ்ப்பாண நகர உணவுச்சாலைகள் உரிய தரங்களை கொண்டிருக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், வெதுப்பக விற்பனைகள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதியளவு காய்கறி உற்பத்தி செய்யப்படுவதுடன் அவை வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் இங்குள்ள உணவு நிலையங்களில் இத்தகைய மரக்கறி வகைகளை பயன்படுத்தப்படாமலும் சோயாமீற், கடலை, பூசணி போன்றவற்றையே கறிகளாக பயன்படுத்துவதாகவும் நுகர்வோர் மத்தியில் அதிருப்தியான நிலை காணப்படுகிறது உன்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள் சிலவும் எட்டப்பட்டன

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் ஊடக அறிக்கையில் குறித்த தீர்மானங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானங்களின்படி, உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் அளவு, நிறை என்பவற்றுக்கமைய விலைகள் தீர்மானிக்கப்பட்டு காட்சிப்படுத்தல் வேண்டும்.

இதற்காக உணவுச்சாலை உரிமையாளர்கள் தமக்குள் ஓர் அமைப்பினை உருவாக்கி மேற்படி அளவு, நிறை என்பவற்றுக்கேற்ப பொதுவான விலையினை தீர்மானத்து எதிர்வரும் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னதாக அதனை மாவட்ட செயலகத்திற்கு அவ்விபரத்தினை பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

வெதுப்பக உற்பத்திகளுக்குரிய விலைகளும் உற்பத்தியின் அளவு, நிறை என்பவற்றிற்கேற்ப வெதுப்பக உரிமையாளர் சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்படுவதோடு விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பான விபரங்கள் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல நகரங்களிலும் குறிப்பிடத்தக்க உணவுச்சாலைகள் உற்பத்தி மற்றும் சேவை வழங்கயில் உயர்தரத்தை பேணி அவற்றுக்குரிய சான்றிதழை சுகாதாரப் பிரிவினரிடம் பெற்றுக் கொண்ட போதிலும், பெரும்பாலான கடைகள் புதிய தரத்துக்கு அமைவாக வேண்டியதை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண வணிகர் அணுசரனையுடன் பிரதேச செயலக ரீதியாக சிறந்த தரத்தை பேணும் உணவுச் சாலைகளை கௌரவித்து சிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்வுகளும் தீர்மானிக்கப்பட்டதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version