Srilanka யாழில் பட்டதாரி மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்! By Tamil - July 29, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் பட்டதாரி மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் பகுதியில் நேற்று (28) இரவு இந்த துயர சம்பவம் நடந்தது. சற்குணரத்தினம் கௌசி (27) என்ற யுவதியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற இந்த மாணவி அண்மையில்தான் பட்டம் பெற்றிருந்தார் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதக குறிப்பிடப்படுகிறது. யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பட்டமளிப்புக்கு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது. இச்சம்பவமானது யுவதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.