இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால்,
அமெரிக்கா முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது, கடந்த வாரம் இந்திய அரசாங்கம் உள்நாட்டு நுகர்வுக்கான அரிசி இருப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்தியாவின் இந்த முடிவால் அமெரிக்கா முழுவதும் அரிசி கொள்முதல் மற்றும் சேமிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாகவும்,
இந்நிலையால் அரிசி விலையும் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.