Friday, December 27, 2024
HomeWorldGermany News100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்தியிருக்கும் வெளிநாட்டவர்.

100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்தியிருக்கும் வெளிநாட்டவர்.

ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார்.

ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.

அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.

சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய ஜோர்ஜ் சீலன் 1971 ஆம் ஆண்டு 19 வயது இளைஞனாக முதன்முறையாக இலங்கைக்கு வந்தார்.

அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் இந்நாட்டுக்கு வந்துள்ளார்.

திருமணமாகாத ஜோர்ஜ் சீலன் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

‘‘இலங்கைக்கு வரும் ஒவ்வொரு முறையும் அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற புராதன இடங்களைப் பார்வையிடச் செல்வேன்.

இலங்கையின் வீதி அமைப்பு தற்போது மிகவும் முன்னேறியுள்ளது. இலங்கை அன்றைய காலத்தை விட மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது.

நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments