சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கார் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கிள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தமையால் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 20 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஏனைய சில அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்நிலையில் பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிக்க சிரியா அரசு போராடி வருவதோடு மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் சிரியா பயங்கரவாத குழுக்களை மையமாகக் கொண்டு வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.