Friday, December 27, 2024
HomeWorldUK Newsஅகதிகளை அடைத்து வைக்க மிதக்கும் சிறையை அமைத்த இங்கிலாந்து அரசு.

அகதிகளை அடைத்து வைக்க மிதக்கும் சிறையை அமைத்த இங்கிலாந்து அரசு.

நாட்டிற்குள் வரும் அகதிகளை அடைத்து வைக்க மிகப்பெரும் மிதக்கும் சிறைச்சாலையை அமைத்துள்ளது இங்கிலாந்து அரசு.

இச்செயல் உலகளவில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 11.72 கோடி மக்கள் போர், இயற்கை சீற்றம், உள்நாட்டு கலவரம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் வலுக்கட்டாயமாக தங்கள் சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (UNHCR) அலுவலகம் தெரிவிக்கிறது.

முதலாளித்துவ நாடுகளால் உருவாக்கப்படும் போர் உள்ளிட்ட காரணங்களால் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி பிறநாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரை மட்டும் இரண்டாயிரம் அகதிகள் தங்களது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் போது கடலில் இறந்துள்ளனர் என புலம் பெயர்வோருக்கான(IOM) சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது,மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறுகிறது.

சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வெனிசுலா, கொலம்பியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் 231,597 அகதிகளும் அகதிகளுக்கான அவர்கள் இருப்பிடத்திற்கான 127,421 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (UNHCR) அலுவலகத்தின் நவம்பர் 2022 புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் நாட்டிற்குள் வரும் அகதிகளுக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அதிக செலவு செய்யவேண்டியுள்ளது எனவும் அந்த செலவுகளை குறைப்பதற்காக தங்கும் இடம் என்ற பெயரில் மிதக்கும் சிறைச்சாலையை நிலை நிறுத்தியுள்ளது இங்கிலாந்து அரசு.

கால்வாய் மற்றும் நதி வழியாகச் சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச்செல்லப் பயன்படுத்தப்படும் தட்டையாக இருக்கும் படகே மிதக்கும் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலை சுமார் 6 கிலோமீட்டர் நீளமும் 2.7 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.

குடியேற்ற செயல்முறை முடியும் வரை அகதிகளை 18 மாதம் வரை இந்த சிறையில் வைத்திருக்க இங்கிலாந்து அரசு எடுத்துள்ள முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் 200 நபர்கள் மட்டுமே தங்கும் அளவு கொண்ட இந்த சிறை சாலை 500 நபர்களை தங்கவைக்கும் இடமாக மாற்றி வடிவமைக்கும் கொடிய முடிவையும் இங்கிலாந்து அரசு எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள போர்ட்லேண்ட் தீவுக்கு அருகில் இந்த மிதக்கும் சிறைச்சாலை நிறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments