Saturday, December 28, 2024
HomeWorldநைஜரில் ஆட்சிக் கவிழ்ப்பு.

நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்பு.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி மொஹமட் பாசுமை சிறைபிடித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியின் ஊடாக இராணுவத்தினர் அறிவித்ததாக வௌிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜனாதிபதிக்கு ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments