Friday, December 27, 2024
HomeSrilankaPoliticsசர்வகட்சி மாநாடு குறித்து சுமந்திரன் எம்.பியின் கருத்து.

சர்வகட்சி மாநாடு குறித்து சுமந்திரன் எம்.பியின் கருத்து.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம். அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26.07.2023) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி எங்களை இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யச் சொல்கின்றார். ஒன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த இணங்க வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் குறித்து பேச வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.

இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமாயின் அதன் அதிகாரங்கள் குறித்து ஏன் கலந்துரையாட முடியாது என்று எங்களுக்குப் புரியவில்லை.

எனவே, குறித்த மாநாட்டை நிறுத்துவதற்கு நாங்கள் முடிவு செய்தோம். மாநாட்டின் ஊடாக எந்தப் பிரதிபலனும் கிடைக்கவில்லை.

நாங்கள் சந்தேகத்துடன் வந்தது போன்றே இங்கு இடம்பெற்றது. தேர்தல் குறித்து கதைக்கும் போது ஜனாதிபதி அச்சத்துடனேயே இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

கலந்துரையாடல் முற்றிலும் அதிருப்தியாகவே அமைந்தது” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments