ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி தற்போது வெளியீடு
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து 5 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த தடை நீக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பின்வரும் அமைப்புகள் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.
* ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
* சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
* சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
* அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
* ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
1. United Thawheed Jamma ‘ath – UTJ
2. Ceylon Thawheed Jamma ‘ath – CTJ
3. Srilanka Thawheed Jamma ‘ath – SLTJ
4. All Ceylon Thawheed Jamma ‘ath – ACTJ
5. JamiyathuI Ansaari Sunnaththul Mohomadiya – JASM
2021 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (மட்டுமீறிய ஒழுங்கமைப்புகளைத் தடைசெய்தல்) ஒழுங்குவிதிகளின் கீழ், எந்தவெவாரு தரப்பினருக்கும் பாதிப்பின்றி முறையாக குறித்த பட்டியிலில் உள்ள 1, 2, 3, 4, 5 ஆகிய பெயர்கள் நீக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.