Home World Canada News கனடாவிலிருந்து பாடசாலை நண்பியை லண்டனில் சந்திக்கச் சென்றவர்? நண்பியின் கணவரால் தாக்குதல்.

கனடாவிலிருந்து பாடசாலை நண்பியை லண்டனில் சந்திக்கச் சென்றவர்? நண்பியின் கணவரால் தாக்குதல்.

0

கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் லண்டன் பொலிசாரால் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் கனகரட்ணம் மகாவித்தியாலயத்தில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் லண்டனில் தனது நண்பியைச் சென்ற வாரம் சந்திக்க சென்றுள்ளார்.

இவர்கள் நேரில் சந்திக்க முன்பாக வட்சப்பில் தொடர்ச்சியாக கதைத்து வந்துள்ளார்கள். பெண்ணின் வட்சப் செயலியை கணவன் தனது அப்பிள் கணனியில் நிறுவி தொடர்ச்சியாக தனது மனைவியை கண்காணித்து வந்துள்ளார். கனடா குடும்பஸ்தர் தனது நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காதல் மொழிகளைக் கூடா கணவன் கண்காணித்து வந்திருந்தாலும் அதைப்பற்றி மனைவியிடம் கேட்காது மௌனமாக இருந்துள்ளார். இந் நிலையில் லண்டனுக்கு கனடா குடும்பஸ்தர் வரும் தகவலை அறிந்தவுடன் மிகவும் பொறுமையாக இருந்து சகலவற்றையும் கண்காணித்துள்ளார்.

லண்டன் வந்த கனடா குடும்பஸ்தர் ஒரு நாள் விடுதியில் தங்கியிருந்த பின்னர் கணவன் இல்லாத நேரம் தனது பாடசாலை நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரு பிள்ளைகளின் தாயான குறித்த நண்பி தனது பிள்ளைகள் மற்றும் கணவன் இல்லாத நேரத்தை வட்சப் மூலம் கனடா குடும்பஸ்தருக்கு தெரிவித்த பின்னரே அவர் நண்பியிடம் சென்றுள்ளார்.

கனடா நண்பன் வீட்டுக்குச் சென்றதை உறுதிப்படுத்திய நண்பியின் கணவன் அங்கு திடீரென புகுந்து கொக்கி விளையாடும் மட்டை மற்றும் போத்தல்களால் கனடா குடும்பஸ்தர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தலை மற்றும் முகம் ஆகியவற்றில் படுகாயங்களுக்குள்ளான கனடா குடும்பஸ்தரை அங்கிருந்து பொலிசாரே மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். அதன் பின்னர் பாடசாலை நண்பியின் கணவனை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கைதாகிய கணவன் தனது மனைவியின் செயற்பாடு மற்றும் குறித்த கனடா குடும்பஸ்தரின் செயற்பாடு போன்றவற்றின் ஆதாரங்களை பொலிசாரிம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. கணவனின் கைத் தொலைபேசியில் கொலை செய்து அதற்கான லண்டன் சட்டத்தில் உள்ள தண்டனை என்ன என்பது தொடர்பான தகவல்களும் தேடுதல் பொறியில் காணப்பட்டுள்ளதாக பொலிசார் அவதானித்துள்ளார்கள்.

கணவனின் திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கணவர் சிறைக்கு செல்ல நேரிடும் என கணவனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version