இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் அபார வெற்றி
முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 166 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 576 ஓட்டங்களைப் பெற்று இன்றைய நான்காம் நாளில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 410 ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் 2ஆம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களையே பெற முடிந்தது.