Home Srilanka Sports அப்துல்லா ஷபீக் இரட்டை சதம், ஆகா சல்மான் சதம் – 3ம்நாள் முடிவில் பாகிஸ்தான்.

அப்துல்லா ஷபீக் இரட்டை சதம், ஆகா சல்மான் சதம் – 3ம்நாள் முடிவில் பாகிஸ்தான்.

0

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார். அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது.

இரண்டாவது நாள் முடிவில் 38.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சவுத் ஷகில் அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version