Home India மணிப்பூரில் மீண்டும் அட்டூழியம்- ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்த கும்பல்.

மணிப்பூரில் மீண்டும் அட்டூழியம்- ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்த கும்பல்.

0

மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகளை உள்ளடக்கிய பழங்குடியினர் 40% மற்றும் முக்கியமாக மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த மே மாதம் மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு ஏராளமான வீடுகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன. இந்நிலையில், மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள மோரே மாவட்டத்தில் இன்று ஒரு கும்பல் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்தது.

காங்போக்பி மாவட்டத்தில் ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் நடந்த மறுநாளில் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

உள்ளூர்வாசிகள் மணிப்பூர் பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை சபோர்மேனாவில் நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சரிபார்த்தனர். அப்போது சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version