பாகிஸ்தானின் கைபர் மாவட்டம் அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மசூதிக்குள் 2 பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் தங்களது உடல்களில் குண்டுகளை கட்டி இருந்தனர். போலீசார் அங்கு வந்து பயங்கரவாதிகளை பிடிக்க முயன்றனர். ஒரு பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார்.
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.