இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி, நாவலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மனைவி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தொலைபேசி உரையாடலின் போது இவ்விருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இது தொடரவே, கணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.