தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தோம்.
கவர்னரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.