Saturday, December 28, 2024
HomeCinema'கேப்டன் மில்லர்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டீசர் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments