கனடாவில் முருகன் கோவிலில் வெள்ளைக்காரர் ஒருவர் இந்துகடவுளான முருகனுக்கு காவடி எடுத்துள்ளமை பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கலாச்சார மோகத்தில் திரியும் நம்மவர்கள் மத்தியில் வெள்ளைக்காரர் ஒருவர் இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து காவடி எடுத்துள்ளமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனடா – மொன்றியல் முருகன் கோவிலிலேயே வெள்ளைக்காரர், முருகனுக்கு காவடி எடுத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
முருகன் ஆலய தேர்த் திருவிழா தினத்தில் பல தமிழர்கள் தங்கள் நேர்த்திகடன்களுக்காக காவடி எடுத்திருந்த நிலையில் வெள்ளைக்காரர் ஒருவரும் பக்தியுடன் காவடி எடுத்திருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.