ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,
அவர்கள் சதி திட்டத்திற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.