வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 27-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
15 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் லெக்ஸ் ஸ்பின்னர் யானிக் கரியா ஆகியோர் அறுவை சிகிச்சையில் இருந்து மறுவாழ்வு பெற்றதைத் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியும் காயத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். முன்னாள் கேப்டன்கள் பூரன், ஹோல்டர் ஆகியோர் அணியின் இடம் பெறவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி:- ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், கெவின் சின்க்ளேர்.