Home World மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல்.

மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல்.

0

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவலை வெளியாகி உள்ளது.

மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோ வான்பரப்பில் உக்ரேனின் இரு ட்ரோன்களை தாம் சுட்டுவீழ்த்தியாகவும், அவற்றில் ஒன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்துக்கு அருகில் ஒரு ட்ரோன் வீழ்ந்ததாகவும் மற்றொரு அலுவலகக் கட்டடமொன்றின் மீது மோதியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய ஆயுதக் களஞ்சியமொன்றின் மீதும் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனின் ஒடிசா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என உக்ரேன் நேற்று சூளுரைத்த நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version