Home World சீனாவில் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

சீனாவில் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

0

சீனாவின் பல பகுதிகளில் கடந்த வார இறுதியில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பிய நிலையில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. பலியானவர்களில் பலர் குழந்தைகள் என நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மழைநீரை உறிஞ்சும் வகையில் பெர்லைட் என்ற கனிமப் கட்டுமானப் பொருளை கூரையின் மீது குவிக்கப்பட்டிருப்பது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version