Home India இரண்டு தலைகள் ஏழு கால்களுடன் பிறந்த எருமை கன்று.

இரண்டு தலைகள் ஏழு கால்களுடன் பிறந்த எருமை கன்று.

0

எமது அண்டை நாடான இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி பெரியம்மாபட்டி, புளியம்பட்டி பகுதியில் இரண்டு தலையுடன் எருமை கன்று குட்டி அறுவை சிகிச்சை மூலம் இறந்து பிறந்தது.

இப்பகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான எருமை சினையாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்று ஈன முடியாமல் சிரமம் அடைந்தது. உடனடியாக கால்நடை டாக்டர் முருகனை அணுகினார். அங்கு வந்த கால்நடை டாக்டர்கள் ஜுபைர் அகமது, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராஜா, முத்துச்சாமி ஆகியோர் அதன் வயிற்றில் இரு தலையுள்ள கன்றுக்குட்டி இருப்பதை அறிந்தனர்.

இயற்கையாக பிரசவிக்க இயலாததால் நான்கு மணிநேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் கன்று குட்டியை வெளியே எடுத்தனர். இருதலை, ஏழு கால்கள், நான்கு கண்கள், இரண்டு வால் என அனைத்தும் ஒட்டிய நிலையில் எருமை கன்று இறந்து பிறந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version