Home Srilanka ஆசிரியர் பற்றாக்குறை;கிழக்கு ஆளுநர் – கல்வி அமைச்சர் இடையே கலந்துரையாடல்.

ஆசிரியர் பற்றாக்குறை;கிழக்கு ஆளுநர் – கல்வி அமைச்சர் இடையே கலந்துரையாடல்.

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் இன்று (24) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் அடிப்படையில் சுசில் பிரேமஜயந்த கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version