டுபாயில் 23 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த இளைஞன் சுற்றுலா விசாவில் டுபாயில் வேலைக்காகச் சென்றிருந்தார்.
அவர் நாட்டிற்குச் சென்ற சொற்ப நாட்களில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தை சேர்ந்த 23 வயதான கசுன் பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெற்றோருக்கு வந்ததையடுத்து கசுனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.