Home Srilanka யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாண மருத்துவமனை வீதியைச் சேர்ந்த எஸ்.ஹரிசந்திரன் (வயது 66) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். அந்தப் பகுதியிலுள்ள கருவாட்டுக்கடைக்காரருக்கு பணம் கடனாகக் கொடுத்ததாகவும், பணத்தை மீளக் கேட்டபோது, தகராறு ஏற்பட்டு, கருவாட்டுக்கடைக்காரரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தே அவர் முறைப்பாடு செய்யச் சென்றுள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்த சமயத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவருடன் முரண்பட்டவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version